இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த்திற்கு சிங்கப்பூரில் உயரிய விருது

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான மீரா சந்த் பெற்றுள்ளார். இவருக்கு 81 வயதாகிறது. மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசியா நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோரும் இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மீரா சந்த் உள்பட 3 பேருக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.