ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

மலையக தமிழ் மக்களை எவ்வாறு இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வடிவேல் சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அது தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, அந்த மாவட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, தமிழ் பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆராய்ந்து வசதிகளை அதிகரிப்பதுடன், அந்தந்த மாவட்டங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.