வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீன வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கின் காங் உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் பிரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங் திடீரென மாயமானார். அவரை பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், ஜூலை மாதம் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், கின் காங்கிற்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வந்ததாகவும், அதற்கு கின் காங் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. சீன கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த உட்கட்சி விசாரணையில், கின் காங் அமெரிக்க தூதராக இருந்த போது, திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது உறுதியானதாகவும், அதன் மூலம் ஒரு குழந்தை உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கின் காங் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு உயிர் இழந்துவிட்டதாகவும் சீன உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. கின் காங் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் இழந்திருக்கலாம் எனவும் அந்நாட்டில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement