பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம்

தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டார். ஆரம்பத்தில் கல்வி குறித்து அவர் பேசிய கருத்துகள், விசித்ராவுடன் அவர் மோதியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அமைதியாவிட்டார். எதிலும் ஈடுபாடுகாட்டாததால் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸில் வெளியேற்றப்பட்டது குறித்து ஜோவிகா தனது சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். நான் இறுதிப் போட்டியாளராக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும், எனக்காக வழியனுப்பியவர்களுக்கும் இந்த கடிதம்.

என் அம்மாவிடம் திரும்புவதற்கான நேரம் இது என்று நான் உண்மையாக உணர்ந்தேன். அவர்தான் என்னுடைய உலகம். அவரை கவனித்துக் கொள்வதும், பாதுகாப்பதும் எனது கடமை மற்றும் பொறுப்பாகும். கடந்த வாரம் நான் உறுதியாக உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நான் விரைவில் வீட்டிற்கு வரவேண்டும் என்பது தான். பிக்பாஸ் வீட்டில் இருந்து இனிமையான நினைவுகள் மற்றும் கற்றல் அனைத்தையும் எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்வேன்.

எனது அன்பான ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல் சிறந்த வீரர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சியின் போது பேசிய எனது உரிமைகள் மற்றும் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எதற்கும் வருத்தப்படமாட்டேன். எனது செயல்களால் உங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பேன் என்று நம்புகிறேன். என எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.