அரசாங்கத்தினால் எக்காரணத்திற்காகவும் மக்களின் வைப்புகளை அறவிடாது, சகல வைப்புகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதை எதிர்காலத்தில் மேலும் பாதுகாப்பாக பேணுவதற்கு வைப்புக்கள் சகலதையும் காப்பீடு செய்வதற்கு அவசியமான பாரிய நிதி தொழில் மயமாக்குவதற்காக 150மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கி உள்ளதாக வெகுஜன, ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன (06) அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றுக் காலத்தில் நாட்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியினால் வங்கி கட்டமைப்பின் நம்பிக்கை தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் கடன் மறு சீரமைப்பின் போது நாட்டின் சகல வைப்பாளர்களின் வைப்புக்களில் ஒரு பகுதி அரசினால் அறவிடப்படுவதாக எதிர்க் கட்சியினால் கதை ஏற்படுத்தப்பட்ட தாகவும், எனினும் அரசாங்கத்தினால் எக்காரணத்திற்காகவும் மக்களின் வைப்புக்கள் அறவிடப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நிதிப் பிரிவின் பாதுகாப்பு வலையத்தை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தை உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.24 அன்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, அவ்வனுமதியின் படி இடம்பெற்ற கடன் தீர்வு பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா வின் வைப்புக் காப்பீட்டு யோசனை முறையை தொழில் மயமாக்குதல், மத்திய வங்கியின் நிறுவன ரீதியான திறன் விருத்தி மற்றும் அதற்கான நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தல் போன்ற விடயங்களின் கீழ் 150மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனதவி வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் திறன்களைப் பரவலாக்குதல், மத்திய வங்கி ஊடாக மேற்பார்வை நடவடிக்கைகளை மேலும் நவீன தொழில்நுட்பம் மிக்கதாக மேற்கொள்ளுதல், வைப்புக்கள் சகலவற்றிற்கும் காப்பீடு வழங்குதல் உயர் நம்பிக்கை மிகுந்த வங்கி முறையொன்றாக முன்வைத்த யோசனை விஷேட முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.