மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் அரசு துரிதமாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு […]
