Turkish Parliament, Turkey MP, hasan bitmez:Turkish Lawmaker Suffers Heart Attack after Declaring Israel Will Not Escape The Wrath Of… | கடவுள் கோபத்துக்கு தப்ப முடியாது: பேசும்போது மாரடைப்பால் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அங்காரா: ஹமாஸ்க்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று துருக்கி பார்லிமென்டில் பேசியபோதே அந்நாட்டு எம்.பி., மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துருக்கி பார்லிமென்டில் எம்.பி ஹசன் பிட்மேஸ் பேசுகையில், ”ஹமாஸ்க்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நாம் ஒருவேளை நம் மனசாட்சியிடம் இருந்து உண்மையை மறைக்கலாம்; ஆனால் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது” என பேசிக்கொண்டிருக்கும் போதே எம்.பி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கு சென்ற அவசர உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தற்போது பிட்மேஸ் அங்காராவில் உள்ள பில்கென்ட் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிட்மேஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.