
எல்ஐசி-க்கு துவக்கத்திலேயே வந்த சிக்கல்
பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இதில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு எல்ஐசி என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு துவக்கத்திலேயே சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தின் தலைப்பு என்னுடையது என இயக்குனர் எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்ஐசி (L I C) என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். இந்த தலைப்பு என்னிடம் உள்ளதால் அதை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்'' என்கிறார் இயக்குனர் எஸ்எஸ் குமரன்.