
அதிகம் தேடப்பட்ட கியாரா அத்வானி
கூகுளில் அதிகம் தேடப்படுவர்களின் பட்டிலை ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனம் வெளியிடும். அந்த வரிசையில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட 10 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதலிடம் பிடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கியாரா காதலித்து மணந்த நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.