துபாய்: இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ‛மினி’ ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸி., அணியின் மிச்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடி கோல்கட்டா அணியும், ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ்-ஐ ரூ.20.5 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டி-20’ கிரிக்கெட் தொடர், 2008 முதல் நடத்தப்படுகிறது. இதன் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ‘மினி’ ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. இதன்மூலம் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம், முதன்முறையாக வெளிநாட்டில் நடத்தப்படுகிறது.
மொத்தம் 333 பேர் (214 இந்தியர், 119 வெளிநாட்டு வீரர்கள்) ஏலம் விடப்படுகின்றனர். இதிலிருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 23 வீரர்களுக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ. 2 கோடியும், 13 பேருக்கு ரூ. 1.5 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கோல்கட்டா அணி ஒப்பந்தம் போட்டது.
கேப்டன் பேட் கம்மின்ஸ்-ஐ ரூ.20.5 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
நியூசி., அணியின் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கு சென்னை அணியும்,
மேற்கு இந்திய அணியின் ரோவ்மென் பாவெல்லை ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியும்,
ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட்-ஐ ரூ.6.80 கோடிக்கு ஐதராபாத் அணியும்,
இங்கிலாந்து வீரர் ஹாரி பரூக்கை ரூ.4 கோடிக்கு டில்லி அணியும்,
இலங்கை வீரர் ஹசரங்காவை ரூ. 1.5 கோடிக்கு ஐதராபாத் அணியும்,
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கு சென்னை அணியும் ஏலம் எடுத்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement