புதுடெல்லி: பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். 2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும் மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும். இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – 2023-ல் 37,427 வீடுகளும் பயனாளிகளுக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மாவட்டம் வாரியாக மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ள வீடுகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை விவரத்தையும் அவர் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:
மாவட்டத்தின் பெயர் | மாநில அரசின் இலக்கு:
- அரியலூர் – 23,295
- செங்கல்பட்டு – 12,750
- கோயம்புத்தூர் – 2,813
- கடலூர் – 55,149
- தருமபுரி – 23,318
- திண்டுக்கல் – 6,928
- ஈரோடு – 7,460
- கள்ளக்குறிச்சி – 11,669
- காஞ்சிபுரம் – 31,575
- கன்னியாகுமரி- 2,366
- கரூர் – 5,520
- கிருஷ்ணகிரி – 19,029
- மதுரை – 7,953
- மயிலாடுதுறை – 11,417
- நாகப்பட்டினம் – 53,308
- நாமக்கல் – 8,556
- பெரம்பலூர் – 13,920
- புதுக்கோட்டை – 30,719
- ராமநாதபுரம் -18,906
- ராணிபேட்டை – 4,124
- சேலம் – 27,562
- சிவகங்கை – 11,136
- தென்காசி – 5,709
- தஞ்சாவூர் – 40,831
- நீலகிரி – 2,737
- தேனி- 1,865
- தூத்துக்குடி – 5,483
- திருச்சிராப்பள்ளி – 22,127
- திருநெல்வேலி .16,597
- திருப்பத்தூர்- 6,819
- திருப்பூர் – 4,206
- திருவள்ளூர் -20,790
- திருவண்ணாமலை – 49,496
- திருவாரூர்- 54,490
- வேலூர் – 35,008
- விழுப்புரம் -1,08,417
- விருதுநகர் – 7,752