வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்கால்; உலக பிரசித்தி பெற்ற காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பெயர்ச்சியடைந்தார். பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று (20ம்தேதி) சனீஸ்வரபகவான் மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு இடம் பெயர்ந்தார். சனிபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இன்று காலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்ட பின்னர் சனீஸ்வர பகவானுக்கு பால், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement