காரைக்கால்:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோயிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
இதையொட்டி இக்கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் சனி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 5:20 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்ததை தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கம்பம்: தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் உள்ளது.
சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள இங்குசனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடந்தது. மதியம் 2:30 மணியிலிருந்து பரிகார சனி பிரிதி ஹோமம், சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் சனிப்பெயர்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். முன்னதாக பரிகாரம் செய்ய வேண்டிய கடகம், மீனம், மகரம், கும்பம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள்சுரபி நதியில் குளித்து பொரி, உப்பு போன்றவற்றை படைத்தனர்.
காக்கை வாகனத்தை தலையை இடது மற்றும் வலது பக்கமாக தலா மூன்று முறை சுற்றி அங்கே வைத்தனர்.இப்பூஜையில்முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். முன்னதாக சுரபி நதிக்கரையில் கை கால்களை கழுவினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement