புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம் 7.37 சதவீதமாகவும்; கிராமப்புற தொழிலாளர்களுக்கான பணவீக்கம் 7.13 சதவீதமாகவும் இருந்தது என, மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், விவசாய தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம் 7.08 சதவீதமாகவும், கிராமப்புற தொழிலாளர்களுக்கான பணவீக்கம் 6.92 சதவீதமாகவும் இருந்தது. மேலும் கடந்தாண்டு நவம்பரில் 6.87 சதவீதமாகவும்; 6.99 சதவீதமாகவும் குறைவாக இருந்தது.
விவசாய தொழிலாளர்களுக்கான உணவுப் பொருள் பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில், 8.42 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 9.38 சதவீதமாக இருந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் 8.18 சதவீதமாக இருந்த கிராமப்புற தொழிலாளர்களுக்கான உணவுப் பொருள் பணவீக்கம், நவம்பரில் 9.14 சதவீதமாக இருந்தது.
அரிசி, கோதுமை, மைதா, பருப்பு வகைகள், வெங்காயம், மஞ்சள், பூண்டு, கலந்த மசாலா போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement