புதுடில்லி:நாடு முழுதும் நேற்று 594 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபநாட்களாக நாடு முழுதும் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, டில்லி அரசின் சுகாதார அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார். நெரிசலான இடங்களில் நடமாடுவதை தவிர்க்க மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகமாக பரவுதால் அங்கு முகக்கவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement