களத்தில் இறங்கி பணி செய்த மாரி செல்வராஜிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வடிவேலு

தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அமைச்சர் உதயநிதி நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் அவருடன் சென்றார். அதுமட்டுமல்ல தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று களத்தில் இறங்கி மீட்பு பணியிலும் ஈடுபட்டார். இதை சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார் நடிகர் வடிவேலு. அவர் கூறும் போது, தமிழக அரசு இன்றைக்கு எவ்வளவோ சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்னையில் புயல் வெள்ளம் ஏற்பட்ட போது அதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை இவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. அதனால் தான் உதயநிதியுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் எதற்காக சென்றார் என்று கேட்கிறார்கள்.

அது அவருடைய சொந்த ஊர். அந்த ஊரில் எங்கெங்கு மேடு பள்ளம் உள்ளது. எந்தெந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அவருக்குத்தான் தெரியும். அதனால் அவர் போகாமல் வேறு யார் போவார்கள். மக்கள் படும் கஷ்டத்தை அரசாங்கம் உணர்ந்ததால்தான் வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளார்கள்.

உயிரிழப்புகள் குறைந்திருக்கிறது. அதோடு அமைச்சர் உதயநிதி வேகமாக சென்று அதிகாரிகளை முடுக்கி விட்டு அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார். என்றாலும் அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று வடிவேலு பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.