புதுடில்லி:தெற்கு டில்லி ஆசிரமம் பகுதியில் நேற்று அரசு பஸ்சில் தீப்பிடித்தது. ஆனால், யாருக்கும் பாதிப்பு இல்லை.
டில்லி ஐ.பி., டிப்போவில் இருந்து பதர்பூருக்கு நேற்று மதியம், காஸில் இயங்கும் அரசு பஸ் சென்றது. மதியம், 12:50 மணிக்கு ஆசிரமம் அருகே சென்று கொண்டிருந்த போது பஸ்சின் பின்பக்க பகுதி தீப்பிடித்து எரிந்தது.
பஸ்சில் இருந்த 15 பயணியர் உடனடியாக இறங்கியதால் தப்பினர்.
தகவல் அறிந்து மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
இதுகுறித்து, போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement