உச்சகட்ட வெறியில் சர்ஃபராஸ் கான்… 63 பந்துகளில் சதம் – இனியாவது வாய்ப்பளிக்குமா பிசிசிஐ?

India National Cricket Team: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs SA Test Series) வரும் டிச.26ஆம் தேதி தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிச. 26ஆம் தேதி முதல் டிச.30ஆம் தேதி வரையும், இரண்டாவது போட்டி வரும் ஜன. 3ஆம் தேதி முதல் ஜன.7ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. 

நீண்ட நாளுக்கு பின் இந்திய அணி (Team India) டெஸ்ட் தொடரில் விளையாடுவதாலும், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் அணிக்கு திரும்ப உள்ளதாலும் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

அந்த வகையில், இந்திய அணியும் டெஸ்ட் தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறது. கடந்த வாரமே இந்திய டெஸ்ட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு வந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் பிரிட்டோரியா நகரில் நடைபெற்றது. டிச.20, 21, 22 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற இருந்த நிலையில், முதல் நாள் போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானது.  

அதாவது, இந்திய அணிக்கும், இந்திய ஏ அணிக்குமான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மான் கில் சதம் அடித்திருந்தாலும், 63 பந்துகளில் சதம் அடித்து சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். அவர் பேட்டிங் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஜடேஜா, ஹர்ஷித் ராணா, சௌரப் குமார் ஆகியோரை அவர் பந்தாடினார்.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Musheer khan (@musheerkhan.97)

சர்ஃபராஸ் கான் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை எனலாம். 2022-23 ரஞ்சி கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 92.66 என்ற சராசரியுடன் மூன்று சதங்கள் உள்பட 556 ரன்களை எடுத்திருந்தார். 2021-2022 ரஞ்சி கோப்பை தொடரில் 982 ரன்களை 122.75 என்ற சராசரியுடன் சர்பராஸ் கான் குவித்தது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

தற்போது டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad Replacement) விரலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில், சர்ஃபராஸ் கானின் இந்த அசுரத்தனமான ஆட்டம், அவருக்கு இந்திய அணியில் இடத்தை பெற்றுத் தருமான என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சர்ஃபராஸ் கானின் இந்த ஆட்டம் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

முன்னதாக, டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் (Ishan Kishan) தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் கேஎஸ் பரத் (KS Bharat) அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி (Virat Kohli) தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவர் போட்டிக்கு முன் இந்திய அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.