புதுடில்லி:“பட்ஜெட்டில் 25 சதவீத தொகை கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது,” என, கல்வி அமைச்சர் அதிஷி சிங் பேசினார்.
டில்லி மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலையின் ஆறாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில், டில்லி கல்வித் துறை அமைச்சர் அதிஷி சிங் பேசியதாவது:
டில்லி அரசில் ஒவ்வோர் ஆண்டும் மொத்த பட்ஜெட் தொகையில் 25 சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் முதலீடுதான். செலவு அல்ல என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றி, மற்ற மாநிலங்களிலும் யோகாசாலா போன்ற திட்டங்களைத் துவக்க வைத்துள்ளது.
மருந்து மற்றும் ஆராய்ச்சி பல்கலை அமைத்தது கெஜ்ரிவால் அரசின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் உருவான அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர்கள் நம் நாட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் வளருவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை நிலை கவர்னர் சக்சேனா, அமைச்சர் அதிஷி ஆகியோர் மாணவ – மாணவியருக்கு பட்டம் வழங்கி பாராட்டினர்.
துணைவேந்தர் ரமேஷ் கோயல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குனர் நிர்மல் கங்குலி பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement