மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக மூத்தத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, தமிழக அரசு எந்த நிவாரணப் பணியும் மேற்கொள்ளவில்லை. இந்திய ராணுவம், கடலோர காவல் படை மத்திய அரசு நிறுவனங்கள் உதவி செய்ய தொடங்கிய பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்க்கிறார்கள்.
இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் நாதியற்றவர்களாக தவிக்கின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும். தமிழக மக்களை காப்பாற்ற நிதானமாக செயல்படக்கூடிய முதல்வராக எடப்படியார் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும். உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய பேச்சு விரைவில் அவருக்கு சரியான பாடத்தை சொல்லிக் கொடுக்கும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவர், துடுக்குத்தனமாக பேசி சென்னையிலும் சேலத்திலும் இருந்து கொண்டு ஏதோ வெள்ளத்தில் நீந்தி மக்களின் கஷ்டங்களை நீக்குவது போல பேசுகிறார்.
ஏதோ வாயில் பேசுவது மட்டும் மக்களுக்கு தீர்வாகாது. நேரடியாக செயல்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு தீர்வாகும். அந்த செயல்பாடு எதுவும் உதயநிதியிடம் இல்லை. மத்திய அரசு இன்னும் ஏராளமான நிதியை தமிழகத்துக்கு தரலாம். தமிழ்நாடு அரசும் உரிய முறையில் அணுகி நிதியை பெறவேண்டும்.

இல்லையென்றாலும் மாநில அரசு தனது சொந்த நிதியில், அம்மா மற்றும் எடப்பாடியாரை போல நிவாரணப் பணிகளை செய்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.