Royal Enfield Himalayan 450 – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஆக்சஸரீஸ் விலை வெளியானது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் புதிதாக பல்வேறு ஆக்சஸரீஸ் கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ரூ 950 முதல் துவங்குகின்ற அக்சஸரீஸ் விலை அதிகபட்சமாக அலுமினியம் பேனியர் பாக்ஸ் ஆனது ரூ. 32,950 ஆக உள்ளது.

பேனியர் கருப்பு அல்லது சில்வர் என இரு நிறத்தில் கிடைக்கின்ற நிலையில் விலை ரூ. 32,950 ஆகும். வாட்டர் புரூப் இன்னர் துனி பைகளும் கிடைக்கின்றன அவை ஜோடியின் விலை ரூ.2,750 மட்டுமே.

RE Himalayan 450 accessories

புதிய ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள ரேலி ஹேண்டில்பார் பேட் விலை வெறும் ரூ. 950 ஆகும். என்ஜின் ஆயில் ஃபில்லர் கேப்களின் இரண்டு வெவ்வேறு தேர்வுகளாக சில்வர் மற்றும் ஒன்று கருப்பு, இரண்டின் விலை ரூ.1,050 ஆக உள்ளது.

டாப் பாக்ஸ் வைப்பதற்கான மவுண்ட் ரூ.2,450, பேனியர் ரெயில் ரூ.3,950. டாப் பாக்ஸ் சில்வர் அல்லது கருப்பு நிறத்தில் கிடைக்கும் நிலையில் அதன் விலை ரூ.23,250 ஆகும்.  31க்கு மேற்பட்ட துனைக்கருவிகளை ஹிமாலயன் 450 வாங்கும் பொழுது ராயல் என்ஃபீல்டின் MIY மூலம் பல்வேறு ஆக்செரிஸ்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 விலை ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.

royal Enfield Himalayan 450 adventure theme Accessories royal Enfield Himalayan 450 rally theme Accessories

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.