கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது டெஸ்ட் இன்று கேப்டவுனில் துவங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகேஷ்குமார் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
இந்திய அணி:
ரோகித் சர்மா(கேப்டன்), ஜெயிஸ்வால், சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், கேஎல்ராகுல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பி.கிருஷ்ணா, முகேஷ்குமார்
தென் ஆப்ரிக்கா அணி
எல்கார்(கேப்டன்), மார்க்ரம், டி ஜோர்ஜி, ஸ்டப்ஸ், பெதின்ஹம், வெரின்னீ, ஜான்சன், மஹாராஜ், ரபாடா, பர்கர், நிகிடி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement