வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், தென் ஆப்ரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது டெஸ்ட் இன்று கேப்டவுனில் துவங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகேஷ்குமார் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர்.
திணறல்
அதன்படி இன்னிங்சை துவக்கிய மார்க்ரம் (2), எல்கர் (4), ஜோர்ஜி (2) ஆகியோர் சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பும்ரா பந்தில் ஸ்டப்ஸ் (3) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய சிராஜ், பெடிங்காம் (12), மார்கோ ஜான்சன் (0), கைல் வர்ரைன் (15) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார். முகேஷ் குமார் பந்தில் மஹாராஜ் (3) கேட்சானார்.
பிறகு, ரபாடா (5), பர்கள்(4) ரன்களிலும் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, பும்ரா, முகேஷ்குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement