Police complaint against 43 people including leader of opposition | எதிர்க்கட்சி தலைவர் உட்பட 43 பேர் மீது போலீசில் புகார்

ஹுப்பள்ளி : போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தியபோது, முதல்வர் சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட 43 பேர் மீது போலீசில், காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

ஹுப்பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு, ராமஜென்ம பூமி விவகாரத்தில் போராட்டம் நடத்திய வழக்கில், ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஹுப்பள்ளி சகாரா போலீஸ் நிலையம் முன், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு எதிராக கோஷம் எழுப்பியவர்கள், முதல்வர் சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சித்துப் பேசினர்.

இதுகுறித்து, ஹுப்பள்ளி நகர காங்கிரஸ் தலைவர் அல்தாப் ஹல்லுார், சகாரா போலீஸ் நிலையத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் பெல்லத், மகேஷ் தெங்கினகாய் உட்பட 43 பேர் மீது, நேற்று புகார் செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.