Tata Punch.ev Bookings open – டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய Acti-EV (active) என்ற புதிய பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட பஞ்ச்.இவி எஸ்யூவி அறிமுகம் செய்திருப்பதுடன் முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்படுகின்றது.

Acti-EV தளத்தின் அடிப்படையில் பஞ்ச் தவிர ஹாரியர்.இவி, கர்வ், சியரா.இவி ஆகிய மாடல்களும் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு வெளியாக உள்ளதை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Tata Punch.ev

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ICE பெற்ற பஞ்ச் காரின் உற்பத்தி இலக்கை 3,00,000 கடந்ததை வெளியிட்டிருந்த நிலையில் அதன் அடிப்படையில் முழுமையான எலக்ட்ரிக் வாகனமாக Punch.ev காரை Acti-EV (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) பிளாட்ஃபாரத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளது.

ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள கார்கள் குறைந்தபட்சம் 300 கிமீ ரேஞ்ச் முதல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தக்கூடிய மாடல்கள் இடம்பெற உள்ளது. மேலும் அதிகபட்சமாக 150Kw DC விரைவு சார்ஜரை ஆதரிப்பதுடன் இந்தியாவின் BNCAP மற்றும் சர்வதேச GNCAP போன்ற கிராஷ் டெஸ்ட் சோதனை முறைகளில் எலக்ட்ரிக் கார்களுக்கு உரித்தான அடிப்படை பாதுகாப்பு கட்டுமானத்தை பெற்றிருக்கும் என டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பிளாட்ஃபாரத்தில் வரவிருக்கும் அனைத்து மாடல்களும் குறைந்தபட்சமாக லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுகப்பினை கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Punch.EV Specs

தோற்ற அமைப்பில் முன்பகுதி புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் எல்இடி புராஜெக்டர் விளக்குகளுடன் புதிய அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில் விளக்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். இன்டிரியரில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருக்கலாம்.

இந்த காரில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் பெற்றிருக்கலாம்.

பஞ்ச்.இவி மாடலில் MR வேரியண்டில் டிகோர் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 26 kWh பேட்டரி பேக் பெற்று 75 PS பவர் மற்றும் 170 Nm டார்க் வெளிப்படுத்தும், முழுமையான சிங்கிள் சார்ஊஇல் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

LR வேரியண்டில் நெக்ஸான்.இவி MR மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 30 kWh பேட்டரி பேக் பெற்று 129 PS பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஜில் 325 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

punch ev suv

பஞ்ச் எலக்ட்ரிக் காரில் 3.3 kw மற்றும் 7.2kW  வரை AC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் 150kW வரை ஆதரிப்பதுடன் மேலும், 10 நிமிடங்களில் சுமார் 100 கிமீ ரேஞ்ச் பெறுவதற்கான சார்ஜிங் பெற முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு பஞ்ச்.EV வேரியண்டில்  ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என 5 வேரியண்டுகளும், டாப் LR அடிப்படையில் அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மூன்று வேரியண்டுகளும் பெற்று மொத்தம் ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷனை பெறுகின்றன.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.