
‛தக் லைப்' படத்தில் இணைந்த மேலும் 2 பிரபலங்கள் : ஜனவரி 18 முதல் படப்பிடிப்பில் கமல்
நாயகன் படத்தை அடுத்து கமலும், மணிரத்னமும் இணைந்துள்ள தக்லைப் படத்தின் அறிமுக டீசர் மற்றும் டைட்டில் கமல் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கவுதம் கார்த்திக் நடிப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த படத்தில் கமலுடன் பல படங்களில் நடித்துள்ள நாசர் மற்றும் விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி ஆகியோரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இந்தியன்-2 படத்தை முடித்து விட்ட கமல்ஹாசன் விரைவில் கல்கி படத்தையும் முடிக்க உள்ளார். இதை அடுத்து ஜனவரி 18ம் தேதி முதல் அவர் தக் லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.