வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (வயது 51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்த தம்பதிக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கிறிஸ்டின் தன் குடும்பத்துடன் சென்ற விமானம் சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement