“வித்யோதயா இலக்கிய விருது விழா 2023” இருக்கான படைப்புக்களை ஏற்றுக்கொள்ளல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் வெளியீட்டுக் குழுவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட “வித்யோதய இலக்கிய விருது விழா 2024” இற்காக 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படைப்புக்கள் பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவிருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஷிரந்த ஹின்கெந்த இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பேராசிரியர், இதற்காக படைப்புக்களின் 02 பிரதிகளை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட அவர், பல்துறை ஆய்வு மத்திய நிலையம், மனித நேய மற்றும் சமூக விஞ்ஞான பீடம், ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகம், கங்கொடவிழா, நுகேகொட எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். அவ்வாறே 0714837683/0702464811 எனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் பேராசிரியர் ஷிரந்த ஹின்கெந்த குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.