இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை இலங்கை விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி நாளை (11) போட்டி நடைபெறும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் C & D மேல் மற்றும் கீழ் பார்வையாளர் மண்டபங்களில் இருந்து (“C & D Upper and Lower Stands”) பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக உட்பிரவேசிக்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம்; அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பகல்ஃஇரவு போட்டியாக நடைபெறவுள்ள நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த இறுதிப் போட்டியின் வெற்றி இலங்கை அணிக்கு போட்டித் தொடரை வெல்வதற்கு முக்கியமானதாக அமையும்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.