
சினிமா என்ட்ரி குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்ரீதேவா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவா. சின்னத்திரையில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள ஸ்ரீதேவா தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்கும் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.