தபால் திணைக்களத்தின் COD புதிய அலுவலகங்கள் இரண்டு பதுளை மற்றும் பண்டாரவளை நகரங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும், தபாலில் பொருட்களை அனுப்பும் சேவையை (COD (cash on delivery)) மிகவும் இலகுவாகவும் வினைத்திறனாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் இப்புதிய அலுவலகங்கள் இரண்டும் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கும் நிகழ்வு தபால் மா அதிபர் ருவான் சத்குமார தலைமையில் (08) இடம்பெற்றது.
இந்த COD சேவை தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதன் ஊடக மிகவும் நம்பிக்கையுடன் பொருட்களை அனுப்பி, அதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இச்சேவையின் ஊடாக ஆகக் கூடுதலாக 40 கிலோ கிராம் பொருட்கள், ரூபா .100 000.00 வரை பெறுமதியானவற்றை, கண்காணிப்பு (Tracking) வசதியுடன், கொண்டு செல்லப்படும் காலத்திற்குக் கட்டணம் இன்றி, நாட்டின் எந்த தபால் அலுவலகத்திலும் பணத்தைப் பெற்றுக்கொள்ளல் போன்ற வசதிகளுடன் இக்காரியாலயங்கள் செயற்படும்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண பிரதி தபால் மாஅதிபர் இந்திக ஹத்துருசிங்க, உட்பட தபால் திணைக்கள மற்றும் அலுவலகங்களின் அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.