'அரசியல் லாபத்திற்காக ராமர் கோவிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது' – சீதாராம் யெச்சூரி

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் புகைப்படம் ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அயோத்தி ராமர் கோவிலை கட்டுவதற்கு முன்பாக 500 கிமீ மெட்ரோ, 4 கோடி இலவச வீடுகள், 315 மருத்துவக் கல்லூரிகள், 45 கோடி ‘முத்ரா’ கடன்கள், 220 கோடி இலவச தடுப்பூசிகள், 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர், 10 கோடி மக்களுக்கு சிலிண்டர் இணைப்புகள், 70,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவை நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ள சீதாராம் யெச்சூரி, “அரசியல் லாபத்திற்காக ராமர் கோவிலை பா.ஜ.க. பயன்படுத்துவது வெட்கக்கேடானது. மக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் நிதிகளை தனது தனிப்பட்ட தொண்டு சேவை மூலம் மக்களுக்கு வழங்குவதைப் போல் மோடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.