இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் நேற்று(11) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தார்.
இதன்போது, முகமாலை பகுதியில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் (ஹலோ ட்ரஸ்ட்) அலுவலகத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து பளை முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களையும் மீள் குடியேற்றப்பட்ட மக்களையும் இளவரசி ஆன் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.