கிருஷ்ணகிரி, ஓசூர் பாகலூர் சாலையை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சமீபகாலமாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். இவர் தன் விபரங்கள் அடங்கிய விளம்பரத்தை தான் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு தனக்கு பொருத்தமான பெண் இருந்தால் கூறவும் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ல் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், விக்னேஷை மணம் முடிக்க விருப்பம் தெரிவித்து, ஒரு பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்கள் வந்துள்ளன. போனிலும் பெண் குரலில் பேசி உள்ளார். அதை நம்பி விக்னேஷ் வாட்ஸ்அப் எண்ணில் சார்ட்டிங் செய்து வந்துள்ளார். கடந்த 15 நாள்களாக வாட்ஸ் அப்பில் பேசி வந்த நிலையில், அந்த எண்ணில் இருந்து நேற்று முன்தினம் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அதில், அவசரம் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறப்பட்டிருந்தது. மணம் முடிக்கவுள்ள பெண்ணுக்கு அவசரம் என நினைத்த விக்னேஷ் 5.56 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த வாட்ஸ்அப் எண் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் விக்னேஷிடம் போலியாக படம் அனுப்பி பெண் போலி ’ஆப்’ உதவியுடன் பேசியும் சாட்டிங் செய்தும் ஏமாற்றியது சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி சேர்ந்த தத்தாத்ரி என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.