மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) போலி டிகிரி சான்றிதழ் சமர்ப்பித்து இயக்குநர் பதிவு பெற்ற DGCA இயக்குநர் குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) இயக்குனராக உள்ள ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்காக போலியான கல்வித் தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளார். ரவீந்தர் சிங் ஜம்வால் என்ற அந்த அதிகாரி சிக்கிமில் உள்ள EIILM பல்கலைக்கழகம் வழங்கியதாக சமர்ப்பித்த சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து சிக்கிமில் உள்ள உயர்கல்வி இயக்குனரகத்திடம் […]
