அயோத்தி: பா.ஜ.எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி அயோத்தி தாம் விழாவில் நடன நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்தா விழா வரும் 16 ம் தேதி துவங்குகிறது. கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இன்று (14 ம் தேதி ) முதல் 22-ம் தேதி வரையிலான காலம் அமிர்த மஹோத்ஸவமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
விழாவில் 100 நாடுகளை சேர்ந்த 55 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விஜபிக்களும் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவ உள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.எம்.பியும் நடிகையும் நடன கலைஞருமான ஹேமமாலினி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது: பல ஆண்டுகளாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில் பிரான் பிரதிஷ்டா விழா நடைபெறுகிறது. வரும் 17 ம் தேதி அயோத்தியில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நடன நாடகத்தை வழங்க உள்ளேன் . இவ்வாறு வீடியோ பதிவில் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement