மலையகத்தில் காணி உரித்துக்குத் தகுதியான மக்களின் காணி உரிமைக்காக 14 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தோட்ட மக்களுக்காக காணித் துண்டுகள் மற்றும் வீடுகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் காணி உரிமைகளுக்காக 04 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
89 பிரதேச செயலகங்களுக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் கீழ் பத்தாயிரம் வீடுகளை நிருமாணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் விபரித்தார்.
தேயிலைத் தோட்டங்களை அண்மித்த மலைநாட்டு சுற்றுலாத் தொழிலை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும், அவ்வாறே புதிய பல்கலைக்கழகமொன்றையும் மலைநாட்டில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேராதனைப் பல்கலைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.