உற்பத்திப் பொருளாதாரமொன்றை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என்றும் அதற்காக முழு நாடும் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கீழ் வரும் கல்விக் கல்லூரிகள் 19 யிலும் காணப்படும் இடவசதிற்கேற்ப அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிக குளிர் காலநிலை காணப்படும் நாடுகளில் பனி பொழியாத ஆறு மாத காலங்களில் தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளின் நடைபாதைகளிலும் பாத்திரங்களில் பயிர் உற்பத்திகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும், அங்குள்ள மக்கள் உற்பத்திப் பொருளாதாரத்தின் விருத்திக்கு ஏதுவாக காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியின் கீழ் நாட்டின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பின்னணியில் நாட்டின் அரச மற்றும் ஏனைய நிறுவனங்கள் உட்பட சகல மக்களும் காலநிலை மாற்றம் போன்ற அனர்த்த நிலைமைகளை வெற்றிகொள்வதற்காக முறையான முன்னாயத்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காலம் கடத்திய யுகம் காணப்பட்டதையும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் நினைவுபடுத்தினார்.