வைத்தியசாலைகளில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தரைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தரைப்படை அறிவித்துள்ளது.
நாடு பூராகவும் அரசாங்க வைத்திய சாலைகளில் சிற்றூழியர்களின் தொழிற்சங்கத்தினால் சில கோரிக்கைகளை முன்வைத்து (16) முதல் ஈடுபடும் வேலை நிறுத்தத்தினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வைத்தியசாலை செயற்பாடுகளை இடையூறின்றி மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் தரைப்படியினரை வைத்தியசாலைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.