வேலூர்: லட்சக்கணக்கில் பணம்… கையும் களவுமாகப் பிடிபட்ட மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

வேலூர் மாவட்டத்தில், தமிழக – ஆந்திர எல்லையையொட்டிய கிறிஸ்டியான்பேட்டையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் [RTO Check Post] சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வகை வெளிமாநில வாகனங்களும்… மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்பட வேண்டும். அனுமதியில்லாத வாகனங்கள், அளவுக்கதிமான பாரம், கூடுதல் பயணிகளை ஏற்றிவருவது உள்ளிட்ட விதிமீறல்களைக் கண்டறிந்து, அபராதத் தொகை வசூலிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்து வரிவசூல் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சோதனைச் சாவடி

இதன் மூலம் அரசுக்கு வருவாய்க் கிடைக்கிறது. இதற்காக, ஒவ்வொரு சோதனைச் சாவடிக்குமே வரி – வருவாய் வசூல் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒருப்பக்கம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வரி வசூல் நடந்தாலும், மற்றொருப் பக்கம் அதைவிட பலமடங்குக்கு முறைகேடாக கையூட்டு வசூலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியைப் பொறுத்தமட்டில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 3 பேர், எட்டு மணிநேரம் என்று சுழற்சி முறையில் பணியில் இருக்கிறார்கள்.

இந்த சோதனைச் சாவடியில் இருந்து மட்டுமே மாதந்தோறும் தோராயமாக ரூ.75 லட்சம் லஞ்சப் பணம் வசூலாவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தன. போலீஸார் ரகசியமாக சோதனைச் சாவடியை கண்காணிக்கத் தொடங்கினர். கடந்த 10-ம் தேதி காலை, வசந்தி என்ற மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணிநேரம் முடிந்தப் பிறகு காரில் வீடு திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்துச் சென்று மடக்கி, காரில் சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.3 லட்சம் லஞ்சப் பணம் பிடிபட்டது.

வசந்தி

அதைத்தொடர்ந்து, வசந்தியின் வீட்டுக்குச் சென்று நடத்திய சோதனையிலும், கூடுதலாக மேலும் ரூ.3.25 லட்சம் பணம் சிக்கியது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வசூலாகும் பணம் யார், யாருக்குப் பங்கிடப்படுகிறது? என்பது குறித்தும் வசந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேடு தொடர்பாக சில ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில், போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் நேற்றைய தினம் மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.