தணிக்கை சபை ரத்து

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்ட வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவினால் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த புதிய வரைவை தயாரிப்பதற்காக தணிக்கை சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் திரைப்படவியலாளர் அசோக ஹாதகம, நாடகக் கலைஞர் ராஜித திஸாநாயக்க, படைப்பாளர் அனோமா ராஜகருணா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

திரைப்படம், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து புதிய சர்வதேச போக்குகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1912 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொது அரங்கேற்றக்கலை கட்டளைச் சட்டத்தினை ஆராய்ந்து இந்த புதிய சட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சட்டத்தின் ஊடாக கலைப் படைப்புகள் தொடர்பில் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இச்சட்டத்தின் மூலம் படைப்பு சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் குழுவின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தெரிவித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.