சீதாதேவியைக் கவர்ந்து கொண்டு ராவணன் செல்கையில், தான் அணிந்து கொண்டிருந்த முத்து மாலையை அறுத்து முத்துக்களை சிந்தியபடியே சென்றாராம் சீதாதேவி. அந்த முத்துக்களை அடையாளம் கண்டு ராமபிரான் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை சீதாதேவிக்கு இருந்தது என்கிறது ஒரு ராமாயணக் கதை. மரவுரி ஏற்று துறவறம் வந்த சீதாதேவிக்கு முத்து மாலை எப்படி வந்தது என்று கேட்கலாம். அது அத்ரி மகரிஷி அனுசுயா தேவி சீதாதேவிக்கு அன்போடு அளித்த நகைகளில் ஒன்று என்கிறது புராணம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஆம், வனவாசத்தில் இருந்த ஸ்ரீராமரும் சீதாதேவியும் இந்த பகுதிக்கு வந்தபோது தோரணமலையில் தங்கி இருந்த அத்ரி மகரிஷி ஆசிரமத்துக்கும் வந்து அவர்களை வணங்கி ஆசி பெற்றார்களாம். அப்போது இல்லற நல்லொழுக்கங்களை சீதாதேவிக்கு போதித்த அனுசுயா தேவி, பல பரிசுகளை சீதாவுக்கு அளித்தாராம். தோரணமலையில் ஓடும் ராம நதியை ஸ்ரீராமரே தனது சந்தியா வந்தனத்துக்காக உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது. சீதையை இழந்தபிறகு ஸ்ரீராமர் இந்த தோரணமலைக்கு வந்து உச்சியில் நின்று தொலை தூரம் வரை நோக்கி சீதையைத் தேடினாராம். அப்போது அவர் நின்ற பகுதியில் அவர் திருப்பாதம் பதிந்துவிட, அவை இன்றும் தோரணமலையில் ஸ்ரீராமர் திருவடி என்று போற்றப்படுகிறது.
ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்தபோது, தோரணமலை வந்து அகத்தியரை சந்தித்து காட்டு வழிகளைக் கடக்கவும், சில அபூர்வ மூலிகைகள் பற்றி அறியவும் கற்றுக் கொண்டாராம். இந்த பகுதியில் இருந்த வனவாசிகள் பலரும் ஸ்ரீராமரை தரிசித்து ஆசி பெற்றார்கள் என்றும் தோரணமலை தலபுராணம் கூறுகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் பக்கத்தில் அமைந்துள்ளது தோரணமலை. தென்பொதிகையில் சித்தர் பெருமக்களுக்கு அருள் செய்ய முருகப்பெருமான் விரும்பியபோது அவரது ஞான சக்தியே மலையாக அமர்ந்து காரணமலை எனும் தோரணமலையானதாம்.
தென்னகம் எங்கும் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் ஆயிரம் உண்டு. அதில் முருகனின் அருள் வாசமும் சித்தர்களின் அரூப வாசமும் உணரக்கூடிய தலம் தோரணமலை. இங்கு பணிபவர் துயர் களைகிறான் கந்தன். மலையேறி வருபவர்க்கு க்ஷண நேரத்தில் அருள்மழை பொழிகிறான் குமரன். சித்தர்களின் நித்திய பூஜையில் மகிழும் சிவபாலன். இங்கு வந்து தொழுபவர்களின் குறையெலாம் தீர்த்து நிறைவாழ்வு பெறச் செய்கிறான். கந்தனுக்கு ‘நான் மீளா அடிமையாகி வாழவேண்டும்’ என்று தேரையர் உள்ளிட்ட பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது.

ஆரோக்கியமும் ஆன்மிகம் இணைந்து விளங்கும் திருத்தலம் தோரணமலை. சிவ -பார்வதி திருமணத்துக்கு தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா, முருகப்பெருமானின் ஆலோசனையால் இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அப்போது மலைமீது அகத்தியருக்குக் காட்சி தந்த குகை, இன்றும் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறையாக உள்ளது. அகத்தியரின் மாணாக்கராக இங்கு வசித்துவந்த தேரையரின் ஜீவசமாதியும் இங்கேயே உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஶ்ரீராமர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை பலரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டுள்ளனர் என்று தலவரலாறு கூறுகிறது. ஞானிகளும் சித்தர்களும் போற்றிய இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த ஆண்டும் தைப்பூச நன்னாளான ஜனவரி 25-ம் தேதி (2022) இந்த ஆலயத்தில் தைப்பூச விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5.30 மணி முதல் மகாஸ்கந்த ஹோமம், மூலவர் –உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

2024 தைப்பூச விழாவைக் கொண்டாட உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகா ஸ்கந்த ஹோமம் எனும் சிறப்பான ஹோமத்தை நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத நோய்கள் தீரும், தோஷம் நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்தச் சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள். சுருங்கச் சொல்லின் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் நீங்கள் வேண்டிக்கொண்டது ஒரு மண்டல காலத்துக்குள் (48 நாள்கள்) நிறைவேறிவிடும் என்கிறார்கள் பெரியோர்கள். எனவே இந்த மகா ஸ்கந்த ஹோமத்தில் பங்கு கொள்வோம்! நலமும் வளமும் பெறுவோம்.
வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07