சென்னை இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடிவடைவதால் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே தொடங்கி உள்ளன இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் […]
