அயோத்தி: அயோத்தியில் இன்று நடைபெற்று வரும் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் நேற்று சென்னையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் 500 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது என கூறிச் சென்றார்.
