“வாட்ஸ்அப் மூலம் நடக்கும் 7 வகையான மோசடிகள்" – எச்சரிக்கும் மத்திய அரசு… மக்களே உஷார்!

எந்தத் தொழில்நுட்பங்களை வெகுஜன மக்கள் பயன்படுத்துகிறார்களோ, அதன் ஊடாகவே சென்று மக்களை ஏமாற்றும் செயல்முறையும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் சிந்தனை குழுவான போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆர்டி), வாட்ஸ்அப் மூலமாக நடத்தப்படும் மோசடிகள் குறித்து எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சைபர் க்ரைம் மோசடி!

அதில், “வாட்ஸ்அப்களில் மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், கடத்தல் மற்றும் ஸ்கிரீன் ஷேர் ஆகிய பெயர்களில் ஏழு வகையான மோசடிகள் நடக்கிறது.

மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து, அவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களிடம் பணம் கோருகின்றனர். 

தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளையும் சிலர் பார்த்துள்ளனர். அதில் நிர்வாண வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பயனர் அச்சுறுத்தப்படுகிறார். ஹேக்கர்கள் பயனரை பிளாக்மெயில் செய்து, பதிலுக்குப் பணத்தைக் கேட்கிறார்கள்.

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அதன் பங்கிற்கு பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளது.  

பெரும்பாலும் வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்கள் மூலம், ஆக்டிவாக இருக்கும் பயனர்களைக் அறிய ஹேக்கர்கள் ‘கோட் ஸ்கிரிப்ட் பாட்களை’ (code scripted bots) பயன்படுத்துகின்றனர். 

ஆள்மாறாட்ட மோசடியின் ஒரு பகுதியாக மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் நிறுவனத்தின் சிஇஓ அல்லது மூத்த அதிகாரி போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.

மோசடி செய்பவர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் போன்றவற்றின் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.

சைபர் மோசடி

சமூக ஊடங்களில் இருந்து பிறரின் தகவலை பெற்று அதைப் போலவே சோஷியல் மீடியா பக்கத்தை மோசடி செய்பவர்கள் உருவாக்குகிறார்கள். முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன் அல்லது பழைய எண்ணில் பிரச்னை என காரணம் சொல்லி லிங்க் அனுப்பி பணம் கோருகின்றனர். 

சமீபத்தில்  வாட்ஸ்அப் மூலம்  வெளியிடப்பட்ட ‘ஸ்கிரீன் ஷேர்’ அம்சம் கவலை அளிக்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில், மோசடி செய்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களின் ஸ்கிரீன் அணுக்கலை பெற்று சட்ட விரோத செயல்களை செய்துள்ளனர். 

எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சந்தேகத்திற்குரிய அல்லது அறியப்படாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.