Whatsapp Fraud: இப்படி எல்லாம் வாட்ஸ்அப்பில் மோசடி நடக்கிறது.. மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்

Technology News in Tamil: வாட்ஸ்அப்பில் இணைய குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் என்ற Police Think Tank Bureau நுகர்வோருக்கு எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதாவது மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் மோசடி, ஹேக்கிங் மற்றும் ஸ்கிரீன் ஷேர் என ஏழு வகையான மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.

மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. இப்படி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த சாட்டிங் ஆப், சைபர் குற்றவாளிகளின் ‘மோசடி மையமாக’ வாட்ஸ்அப் மாறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களை குறி வைத்து பல்வேறு வகையான மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர். இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Police Think Tank Bureau மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் மோசடி எப்படி நடக்குது?

திங்க் டேங்க் பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் ​​மோசடி முறைகள் பற்றி கூறியுள்ளது. 

— வாட்ஸ்அப் மூலம் மிஸ்டு கால் தருவது 
— வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் அழைப்பை மேற்கொள்வது
— வாட்ஸ்அப்  மூலம் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பை வழங்குவது
— முதலீட்டுத் திட்டம் என்ற சாக்கில் வாட்ஸ்அப்  மூலம் கால் செய்வது
— உங்கள் அடையாளத்தை பயன்படுத்தி மோசடி
— திரை பகிர்வு மூலம்
— வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி பணம் மோசடி
— உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கிங் செய்வது
— ஹேக்கிங் செய்வதன் மூலம் பயனரின் வாட்ஸ்அப் அணுகலைப் பெறுகிறார்கள். இதன் மூலம் பயனாளிகளின் தொடர்புகளில் இருக்கும் நபர்களிடம் நீங்கள் பணம் கேட்பது போல மெசேஜ் அனுப்புவார்கள்.

வாட்ஸ்அப் மோசடி செய்பவர்களைத் தவிர்ப்பதற்கான வழிகள்

அடிக்கடி வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப்பில் தெரியாத அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். இத்தகைய அழைப்புகள் பொதுவாக செக்ஸ்டோர்ஷனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது, ​​முதலீட்டுத் திட்டம் அல்லது வேலை தொடர்பான தகவல்கள் வந்தால், அந்த லிங்கை கிளிக் செய்தவதற்கு முன் கவனமாக இருங்கள்.

வாட்ஸ்அப்பின் திரை பகிர்வு அம்சத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பயன்படுத்தவும்.

வாட்ஸ்அப்பில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தால், அவருடைய குரலில் அதிக கவனம் செலுத்துங்கள். 

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் செய்தி அனுப்புகிறார் என்பதற்காக உடனடியாக பணம் செலுத்த வேண்டாம்.

வாட்ஸ்அப் மூலம் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு மூலம் தொடர்புக் கொண்டு பணம் திருடும் கும்பல் அதிகரித்துள்ளதால், மிகுந்த கவனத்துடன் இருங்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.