கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் மாவட்ட செயலகத்தில் (22) திகதி கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் பருவபெயர்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நஸ்டஈடு வழங்கள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சினால் வெளியிடப்பட்ட காப்புறுதி சுற்று நிருபத்திற்கமைய நஸ்டஈடு மதிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக இதன் போது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு மாவட்டத்தில் கமநல நிலையங்களில் பதியப்பட்ட பயிர்களை நேரில் சென்று ஆராய்ந்து பாதிப்பினை அறிக்கையிடவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

மேலும் களவிஜயத்தின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களையும் பாதியளவில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் அவதானித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தலைமையிலான உத்தியோகத்தர்களும், மதிப்பிட்டு குழு உத்தியோகத்தர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகளும் இணைந்து மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி பணிப்பாளர் ரஜிவ குளரத்ன, கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள், மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள், விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் எஸ்.தனிநாயகம் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.