வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மறைந்த பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குர் ‛ பாரத ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு துறைகளில் தேசிய அளவில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான இவ்விருது மறைந்த பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குர் (1924-1988) தேர்வு செய்யப்பட்டார்.
இவர் கடந்த 1970ம் ஆண்டு முதல் 1971 வரை இம்மாநில முதல்வராக இருந்தார். அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கைக்காக போராட்டம் நடத்தியவர். ஜனநாயக் என அழைக்கப்பட்டவர். நாளை அவரது பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement