சென்னை: 75வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார். அவருடன் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக […]
