“சத்தியமா ஜோக் என நினைத்து தான் பதிவிட்டேன்!” – தாலிபன் ஜோக்கால் சிக்கலை சந்தித்த மாணவர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் ஒருவர் லண்டனில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 -ம் ஆண்டு ஜூலை மாதம் லண்டன் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா எனும் தீவுக்கு சென்றார்.

அப்போது விளையாட்டாக சமூகவலைதளமான தனது ஸ்னாப்சாட் கணக்கில் இருந்து, `தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன்’( “On my way to blow up the plane (I’m a member of the Taliban)) என்றும் பதிவிட்டிருக்கிறார். நகைச்சுவை என்று நினைத்து பதிவிட்ட அந்த ஒரு பதிவால், தற்போது வரை அவர் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

விமானம்

அன்று, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் யு.கே பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த பதிவு கண்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின் பாதுகாப்பு அதிகாரிகளும் தகவல் சொல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்பெயினின் இரண்டு போர் விமானங்களின் பாதுகாப்புடன் விமானம் தரையிறங்கியது. மேலும் ஆதித்ய வர்மா கைது செய்யப்பட்டதுடன், இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விசாரணையில் போது, ஆதித்ய வர்மா பயணித்த விமானத்தின் இரு புறமும் போர் விமானங்கள் வந்தது ஏன் எனத் தெரியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதிகாரிகள். அதற்கு அவர் ரஷ்யா உக்ரைன் போர் நடப்பதால் அது தொடர்பான பணிகள் என நினைத்தேன் என்றிருக்கிறார். மேலும் குறிப்பிட்ட நாளில் ஜோக் என்று நினைத்தே அந்த பதிவை போட்டதாகவும் யாருக்கும் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு இருந்ததில்லை என்றும், சிறு வயது முதலே தான் நகைச்சுவை உணர்வுடன் இருந்து வந்ததாகவும் ஸ்பெயின் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் வர்மாவின் போனை ஆய்வுக்குட்படுத்திய போலீஸார், அவர் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை குறித்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பகுதிகள் குறித்தும் தகவல்களை தேடி இருந்தாலும், அவருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

விமானம்

தற்போது வரை ஆதித்ய வர்மா பயங்கரவாத குற்றச்சாட்டுகளையோ, சிறைத் தண்டனையோ எதிர்கொள்ளவில்லை என்றாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 22,500 யூரோக்கள், அதாவது ரூ. 20,35,145 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார்கள். இது தவிர, கூடுதலாக, ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு ஜெட் விமானங்களை அனுப்பியதக்காக 95,000 யூரோக்கள், அதாவது ரூ. 85,92,835 செலவீனமாக கேட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.